×

மயிலாடுதுறை துலா கட்டத்தில் தூய்மையை பராமரிக்க கோரிக்கை

மயிலாடுதுறை, ஏப்.26:மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:மயிலாடுதுறையில்  உள்ள காவேரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதத்தில்  துலா உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி புண்ணியம் தேடும் விழா  நடைபெறுகிறது. காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வராததால் பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டு துலாக்கட்டத்தில் தண்ணீர் இருக்கவேண்டும் என்பதால் தான் மின்மோட்டார் வசதிகள் செய்யப்பட்டு தண்ணீரை தேக்கிட வசதியாக சிட்டி யூனியன் வங்கியின் நிதியுதவியுடன் புனித நீர் தேக்க தொட்டியும் அமைக்கப்பட்டது.

ஆண்டுமுழுவதும் பக்தர்கள் இப்பகுதிக்கு வருகை தருவதால் அவர்கள் புனித நீராடிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதனை விழாக் காலங்கள்  தவிர மற்ற காலங்களில் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. துலா விழாக்கள் வழியாக நகராட்சி நிர்வாகத்திற்கு ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தும் இப்படியாக கவனம் செலுத்தாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. நாகை கலெக்டர் தனிக்கவனம் செலுத்தி  நேரில் பார்வையிட்டு, இந்த துலா கட்டப்பகுதியினை எப்போது தூய்மையாக இருக்க நடவடிக்கைகள் எடுத்திடவேண்டும். மேலும் அங்கே ஆண்டுமுழுவதும்  தண்ணீரை நிரப்பி தினமும் பக்தர்கள் புனித நீராடிட வழிவகை செய்திடவேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : stage ,Mayiladuthurai Tula ,
× RELATED வில்வித்தை உலக கோப்பை போட்டி; இந்திய...