×

அஞ்செட்டி அருகே மாரியம்மன் கோயில் திருவிழா

தேன்கனிக்கோட்டை, ஏப்.26: அஞ்செட்டி அருகே தொட்டமஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, நேற்று பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு வழிபட்டனர். அஞ்செட்டி தாலுகா தொட்டமஞ்சி மலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மஞ்சி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. நேற்று காலை அக்னி குண்டம் நடைபெற்றது. பின்னர் இருளர் இனமக்கள், தங்கள் பாரம்பரிய உடை அணிந்து, இசை கருவிகளை இசைத்தபடி, கரகம் ஏந்தி கோயிலை சுற்றி வலம் வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு, அங்கேயே சமைத்து அன்னதானம் செய்தனர். இந்த விழாவில், அஞ்செட்டி சுற்றுவட்டார மலை கிராம மக்கள், தேன்கனிக்கோட்டை, ஓசூர், பெங்களூரூவை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Mariamman Temple Festival ,Anjeti ,
× RELATED மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வெறிச்சோடிய மீன் மார்க்கெட்