×

ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் சாலைப் பணிகள் நிறுத்தம் கலெக்டர் உத்தரவு

ஓசூர், ஏப்.22:  ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் மேற்கொண்ட சாலைப் பணிகள், கலெக்டர் உத்தரவை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. ஓசூர் நகராட்சியில் பழமையான ராமநாயக்கன் ஏரி அமைந்துள்ளது. நகரின் ஒட்டுமொத்த நீராதாரமாக இந்த ஏரி விளங்குகிறது. இந்நிலையில்,  ராமநாயக்கன் ஏரியில் இருந்து சப் கலெக்டர் அலுவலகம் வரை 0.7 கி.மீ தூரம் இருவழி சாலை மற்றும் நடைபாதை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு, ₹8.99 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டது. ஏரியில் ஆக்கிரமித்து கரையில் சாலை அமைப்பதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அடுத்தடுத்து வந்த புகாரின் பேரில், ராமநாயக்கன் ஏரியில் சாலை அமைக்கும் பணியை, தற்காலிகமாக நிறுத்தும்படி கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து  பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் பிரபாகர் கூறுகையில், ‘ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் நீர்பிடிப்பு பகுதியில் சாலை அமைக்கப்படுவதால், ஏரிக்கான நீராதாரம் குறையும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஏரியில் கட்டிடங்கள் கட்டுவதாலும், சாலை அமைப்பதாலும் நீராதாரம் குறையும். ராமநாயக்கன் ஏரிக்கரை மீது, ஏற்கனவே  சாலை உள்ளதால்,  நீராதாரம்  குறையாதவாறு, இன்ஜினியரிங் டிசைன் பெற்று, பின்னர் பணிகள் செய்ய வேண்டும். அதுவரை  பணிகளை நிறுத்துமாறு ஆர்டிஓவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,’ என்றார்.

Tags : road maintenance worker ,lake ,Hoshiar Ramanayakan ,
× RELATED காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரியில்...