×

மாடுகளை திருடிய வழக்கில் 3 பேர் கைது

தேன்கனிக்கோட்டை, ஜூன் 21: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பஜ்ஜேப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் முத்தப்பா (54), விவசாயி. மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 19ம் தேதி அதிகாலை, மாட்டு கொட்டகையில் சத்தம் கேட்டதால், அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது 3 பேர் மாடுகளை திருடி கொண்டிருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த முத்தப்பா, கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த கும்பலை பிடிக்க முயன்றார்.

ஒருவர் சிக்கிய நிலையில், மற்ற 2 பேர் தப்பியோடி விட்டனர். பிடிபட்ட நபரை தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் கெண்டிகானப்பள்ளியை சேர்ந்த முனிராஜ் (48) என்பது தெரிந்தது. மேலும், தப்பியோடிய தேன்கனிக்கோட்டை ஜெய்தெருவை சேர்ந்த ரமேஷ் (43), மருதனப்பள்ளி பேளூர் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (38) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர், மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

The post மாடுகளை திருடிய வழக்கில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Muthappa ,Bajjepalli ,Dhenkanikottai, Krishnagiri district ,
× RELATED டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி