×

கஞ்சா விற்ற முதியவர் கைது

கிருஷ்ணகிரி, ஜூன் 23: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை எஸ்எஸ்ஐ சரசு மற்றும் போலீசார், உள்ளுக்குறுக்கி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த முதியவரிடம் விசாரித்தனர். இதில், அவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ₹1000 மதிப்பிலான 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

The post கஞ்சா விற்ற முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Rayakottai ,SSI ,Sarasu ,Inukkuriki ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED மக்களவையில் தெலுங்கில் பதவியேற்ற...