×
Saravana Stores

இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்து வாலிபர் படுகாயம்

உத்திரமேரூர், ஏப்.22: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அமராவதிபட்டினம் கிராமத்தில் தனியார் இரும்பு உருக்காலை செயல்படுகிறது. இங்கு, வடமாநிலங்களை சேர்ந்த ஊழியர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன், ஊழியர்கள் இரவு பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென, அங்கிருந்த பாய்லர் வெடித்து சிறியது. இதில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம்விலாஸ் (28) என்ற வாலிபர் படுகாயமடைந்தார். இதை பார்த்த சக ஊழியர்கள், உடனடியாக அவரை மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கடந்த 5ம் தேதி களியாம்பூண்டி கிராமத்தில் செயல்படும் தனியார் இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் 5 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Boyle ,blast ,
× RELATED டெல்லியில் சிஆர்பிஎப் பள்ளி அருகே...