×

வாலாஜா அருகே பரபரப்பு வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்த 82 வயது மூதாட்டி பலி கையில் மை வைத்த நிலையில்

வாலாஜா, ஏப். 19: வாலாஜா அருகே வாக்களிக்க சென்றபோது, கையில் மை வைத்த நிலையில் வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்த 82 வயது மூதாட்டி பரிதாபமாக இறந்தார். வேலூர் மாவட்டம், அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட வாலாஜா ஊராட்சி ஒன்றியம் அனந்தலை கிராமத்தில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ெதாடங்கியது. இந்நிலையில் 8.30 மணியளவில் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி துளசியம்மாள்(82) என்பவர் வாக்களிக்க வந்தார். வரிசையில் நின்று வாக்குச்சாவடிக்குள் வந்த அவரது புகைப்பட அடையாள அட்டையை சோதனை செய்தபின், அவரது கை விரலில் ஊழியர்கள் மை வைத்து, வாக்களிக்க செல்லும்படி கூறினர். வாக்குப்பதிவு இயந்திரம் இருந்த இடத்திற்கு செல்ல முயன்றபோது துளசியம்மாள் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதற்றமடைந்த அதிகாரிகள் உடனடியாக அவரை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது சடலம் குளத்தூரில் மகன் ராஜேந்திரன் வீட்டுக்கு ெகாண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சப்-கலெக்டர் இளம்பகவத், மூதாட்டி வீட்டிற்கு சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Tags : maid ,Valaja ,
× RELATED தஞ்சையில் நீதிமன்ற பணிப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி