×

பூத் சிலிப் வழக்கும் பணி திட்டமிட்டு புறக்கணிப்பு

கருங்கல், ஏப். 18: குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பூத் சிலிப் வழிமுறை  இதுவரை இல்லாத முறையில் இந்த மாவட்டத்தில் புதிய பிரச்னையாக உருவாகியுள்ளது. பாஜவுக்கு சாதகமான இடங்களில் மட்டும் பூத் சிலிப் கொடுக்க வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதனால் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ள மேற்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று (நேற்று) மாலை 6 மணி வரையிலும் பூத் சிலிப் விநியோகம் செய்யப்படாதது மிகவும் கண்டனத்துக்குரியது. இது பற்றி பொதுமக்கள் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு போண் மூலம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதிலிருந்தே இந்திய வரலாற்றில்  தேர்தல் ஆணையம் ஒரு கட்சிக்கு மட்டுமே ஆதரவாக  இருப்பது கண் கூடாக தெரிகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags : Booth Chile ,
× RELATED பூத் சிலிப் மட்டும் இருந்தால் போதாது;...