×

மாவட்டம் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் அவதி போவோமா சம்மர் டூர்... புண்ணிய பூமிக்கு புறப்படுவோமா ராமேஸ்வரத்திற்கு ஒரு மினி டூர் செல்லலாமா?

ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் பிறந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு ஒரு மினி டூர் செல்லலாமா? பெரும்பாலும் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் ஊர் என்றே, இதை பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது தவறு. பாவங்கள் எல்லாவற்றையும் போக்கி, நம்மை புனிதராக்கும் இடம்தான் ராமேஸ்வரம் என்பது பொதுவாக கூறும் ஐதீகம். இங்கு சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
ராமேஸ்வரம் வந்ததும் உங்களை முதலில் வரவேற்பு ராமநாத சுவாமி கோயில்.  அம்மனாக பர்வதவர்த்தினி காட்சி அளிக்கின்றனர். இங்கு தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படும் கடலில் குளிக்க வேண்டும். பின் 22 தீர்த்தக்கிணறுகளிலும் நீராட வேண்டும். சுவாமி தரிசனத்தை விடவும், அங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவதுதான் சிறப்பு என்கின்றனர் ஆன்மிகவாதிகள்.
நீராட வேண்டிய தீர்த்தங்களையும் அவற்றின்
பலன்களையும் பார்ப்போமா?
1. மகாலட்சுமி தீர்த்தம்    செல்வம் பெருகும்.
2. சாவித்திரி தீர்த்தம்    பேச்சுத்திறன் வளரும்.
3. காயத்ரி தீர்த்தம்    உலக நன்மை உண்டாகும்.
4. சரஸ்வதி தீர்த்தம்    கல்வி உயர்வு தரும்.
5. சங்கு தீர்த்தம்    வாழ்வு மேம்படும்.
6. சக்கர தீர்த்தம்    மன உறுதி வலுப்படும்.
7. சேதுமாதவ தீர்த்தம்    நின்ற பணி தொடரும்.
8. நள தீர்த்தம்    தடைகள் விலகும்.
9. நீல தீர்த்தம்    எதிரிகள் நடுங்குவர்.
10. கவய தீர்த்தம்    பகை மறையும்.
11. கவாட்ச தீர்த்தம்    கவலை விலகும்.
12. கந்தமாதன தீர்த்தம்    தொழிலில் உயரலாம்.
13. பிரம்மஹத்தி தீர்த்தம்    தோஷம் நீங்கும்.
14. கங்கை தீர்த்தம்    பாவம் நீங்கும்.
15. யமுனை தீர்த்தம்    பதவி உயர்வு பெறலாம்.
16. கயா தீர்த்தம்    முன்னோர் ஆசி கிடைக்கும்.
17. சர்வ தீர்த்தம்    முன்பிறவி பாவம் நீங்கும்.
18. சிவ தீர்த்தம்    நோய்கள் விலகும்.
19. சத்யாமிர்த தீர்த்தம்    ஆயுள் கூடும்.
20. சந்திர தீர்த்தம்    கலை ஆர்வம் பெருகும்.
21. சூரிய தீர்த்தம்    உயர்பதவியை அடையலாம்.
22. கோடி தீர்த்தம்    முக்தி அடையலாம்.
- என்ன ஓகேயா? அடுத்ததாக கோயிலுக்குள் பாதாள பைரவர், இரட்டை விநாயகர் அருள் பாலிக்கிறார்கள். அவர்களையும் நீங்கள் தரிசித்து விட்டு வரலாம். மேலும், கோயிலில் கலைநுட்பமிக்க சிற்பங்கள், பிரஹாரங்கள், கோபுரங்களையும் கண்டு பிரம்மித்து விட்டு வரலாம். தொடர்ந்து ராமேஸ்வரத்தை சுற்றி உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களை அடுத்தடுத்து பார்ப்போம்.
ÜPMŠ¹: ÞŠð°FJ™ ªõOò£°‹ M÷‹ðóƒèœ ªî£ì˜ð£è ïìõ®‚¬èè¬÷ ¶õ‚°º¡ ªð£¼ˆîñ£ù Mê£ó¬í ªêŒ¶ Mõóƒè¬÷ àÁF ªêŒ»‹ð® õ£êè˜èœ «è†´‚ªè£œ÷Šð´Aø£˜èœ. M÷‹ðóî£ó˜ «è£¼‹ ªêŒFèÀ‚° 裙 ðŠO‚«èû¡v H¬ó«õ† LIªì† ꣡Á î¼õF™¬ô. M÷‹ðóî£ó˜ «è£¼‹ Mõóƒèœ îõø£è Þ¼‚°‹ ð†êˆF™, 裙 ðŠO«èû¡v H¬ó«õ† LIªì†®¡ Ü„C´«õ£˜, ªõOJ´«õ£˜, ÝCKò˜ ñŸÁ‹ àK¬ñò£÷˜ ªð£ÁŠð£ùõ˜ â¡«ø£ èì¬ñŠð†ìõ˜ â¡«ø£ ªè£œ÷ º®ò£¶.

Tags : District civilians ,Summer Tour ,earth ,tour ,Rameswaram ,
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?