×

காங்.,தேமுதிக வேட்பாளர்கள் ஓரே நேரத்தில் பிரசாரம்

திருமங்கலம், ஏப். 17: திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே காங்கிரஸ், தேமுதிக வேட்பாளர் ஒரே நேரத்தில் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் தொகுதி அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி திருமங்கலம் தெற்குதெருவில் உள்ள காந்திசிலையில் இருந்து தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். இதில், அதிமுக நகரசெயலாளர் விஜயன், தேமுதிக நகரச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கூட்டணி கட்சியினர் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வந்தனர். விருதுநகர் ரோடு, மதுரை ரோடு, பஸ்ஸ்டாண்ட் வழியாக ராஜாஜிசிலையை அடைந்தனர்.

அங்கு அதிமுக நகரசெயலாளர் விஜயன் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அங்கு திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தனது கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், டிஎஸ்பி அருண் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மோதல் ஏற்படும் சூழல் உருவானது. உடனே போலீசார் அதிமுக ஊர்வலத்தை தடுத்து நிறுத்திவைத்து திமுக ஊர்வலத்தை அந்த இடத்தை கடந்து செல்ல அனுமதித்தனர். இதனால், போலீசார் நிம்மதி அடைந்தனர். இதனால், சுமார் 10 நிமிடங்கள் ராஜாஜிசிலை அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Cong. ,Demetri ,
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...