×

பாப்பான்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படும்

கடையம்,ஏப்.16: கடையம் ஒன்றிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியம், பாப்பான்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தபட்டு மேம்படுத்தபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக்கப்படும் என உறுதியளித்தார். கடையம் ஒன்றிய பகுதிகளான ஐந்தாம்கட்டளை, லெட்சுமியூர், வடமலைபட்டி, வள்ளியம்மாள்புரம், தெற்கு மடத்தூர், காவூர், மடத்துபட்டி, சொக்கலிங்கபுரம், சிவநாடானூர், முருகான்டியூர், ஏபி நாடானூர், செல்லபிள்ளையார்குளம், பாப்பான்குளம், பேராமணி, பாட்டத்தெரு, மையிலபுரம், சடையாண்டியூர், துப்பாக்குடி, ராவுத்தபேரி மற்றும் அடைச்சாணி ஆகிய பகுதிகளில் நெல்லை திமுக மக்களவை வேட்பாளர் ஞானதிரவியம் பிரசாரம் மேற்கொண்டார். இதில் ஆலங்குளம் எம்எல்ஏ பூங்கோதை, முன்னாள் எம்எல்ஏ வேல்துரை ஆகியோரும் பங்கேற்று வாக்கு சேகரித்தனர்.

பிரசாரத்தில் ஞான திரவியம் பேசியதாவது: ‘பாப்பான்குளத்தில் தற்போது செயல்பட்டுவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தபடும். பாப்பான்கால் கால்வாயை முறையாக தூர்வாரி அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படும். தமிழகத்தில் இந்த மூன்று ஆண்டுகளாக உள்ள எடுபிடி ஆட்சியானது மோடியின் ஆட்சியாக தான் இருந்து கொண்டிருக்கிறது. மக்கள் நலனில் எந்த ஒரு அக்கறையும் காட்டாத ஆட்சி எடப்பாடி ஆட்சி விரைவில் அகற்ற வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய கடன் தள்ளுபடி, கல்விகடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து, போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை தந்த ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்தாத இந்த எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நூறு நாள் வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும். உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் தான் கிராமங்களில் தெரு வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர முடியும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
 கடையம் ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட துணை செயலாளர் சரஸ்வதி நாராயணன், மீனவ பிரிவு மாவட்ட செயலாளர் எரிக் ஜூடு, மாவட்ட மகளிரணி செல்வி சங்கு

கிருஷ்ணன், சங்குகிருஷ்ணன்,  மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் சேர்மசெல்வன், ஆழ்வை நகர செயலாளர் பொன்ஸ், பொருளாளர் துரை, ஊராட்சி செயலர்கள் முருகன், சர்க்கரைகுமரன், விவசாய சங்கம் முருகன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம், தகவல் தொழில் நுட்ப பிரிவு சிங்கதுரை, மதிமுக ஒன்றிய செயலாளர் மதியழகன்,  இளைஞரணி சங்கரன், காங்கிரஸ் வட்டார தலைவர் மாரியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆதிமூலம், கிராம கமிட்டி நிர்வாகிகள் ஜீவானந்தம், குமரேசன், சத்திய வரதன், ஆறுமுகம், நயினார், ஆனந்தராஜ், துணைத்தலைவர் மாயாண்டி,  விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ஆதிதமிழன் அன்பழன், ஆம்பூர் பரமசிவன், இந்திய கம்யூனிஸ்ட் வேலாயுதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ராமகிருஷ்ணன் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : Basakulam Primary Health Center ,
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது