×

சுசீந்திரம் கோயிலில் கணிதரிசனம்

சுசீந்திரம், ஏப்.16: தமிழகத்தில் நேற்றுமுன்தினம் சித்திரை பிறப்பையொட்டி விஷு கொண்டாடப்பட்டது. கோயில்கள் மற்றும் வீடுகளில் சுவாமியின் முன்பு மக்கள் காய்கனிகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். கோயில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக கைநீட்டம் மற்றும் காய்கனிகள் வழங்கப்பட்டன. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் கேரள பஞ்சாங்கப்படி பூஜைகள் நடத்தப்படுகின்றன. கேரள பஞ்சாங்கத்தின்படி நேற்றுதான் சித்திரை பிறந்தது. இதனால் சுசீந்திரம் கோயிலில்  நேற்று விஷூ கணிகாணல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை கோயில்நடை திறக்கப்பட்டது. தாணுமாலய சுவாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமியின் முன்பு தங்க, வெள்ளி குடங்கள், தங்க, வெள்ளி விளக்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.மேலும் கோயில் உட்பகுதியில் உள்ள செண்பகராமன் மண்டபத்தில் சிவ பெருமானின் முழு உருவப்படம் வரையப்பட்டு, அதன் முன்பு ஏராளமான காய்கனிகள், பழவகைகள் படைத்து வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான பக்தர்கள் கணி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக காய்கனிகள், கைநீட்டம் ஆகியன வழங்கப்பட்டன.

Tags : Suchindram ,
× RELATED குப்பைகளை எரிப்பதால் அழியும் நிலையில் சாலையோர மரங்கள்