கள்ளக்குறிச்சியில் பெருந்திட்ட வளாகம் அமைக்க நடவடிக்கை

கள்ளக்குறிச்சி, ஏப். 14: கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்  முன்னாள் எம்எல்ஏ கோமுகிமணியன் நேற்று கள்ளக்குறிச்சி ஒன்றிய பகுதியான நீலமங்கலம், நிறைமதி, வீரசோழபுரம், வி.பாளையம், தண்டலை, சிறுவங்கூர், பெருவங்கூர், ரோடுமாமாந்தூர் உள்ளிட்ட கிராமங்களில் திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் பரிசுப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் கோமுகிமணியன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசுகையில், பிரபு எம்எல்ஏ முயற்சியால் கள்ளக்குறிச்சி தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், கள்ளக்குறிச்சியில் மாவட்ட பெருந்திட்ட வளாகம் அமைய நடவடிக்கை எடுப்பேன். எனவே மண்ணின் மைந்தர் ஆகிய என்ணை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள் என்றார்.

 இதில் கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் மதுசூதனன், மாவட்ட பொருளாளர் மாதேஸ்வரன், மாவட்ட மகளிர் அணி தலைவி தனலட்சுமி, மாவட்ட மருத்துவரணி செயலாளர் கிருபாநிதி, ஒன்றிய துணை செயலாளர்கள் சக்திவேல், உதயகுமார், ஒன்றிய பொருளாளர் தட்சணாமூர்த்தி, மகளிர் அணி சாந்தி, ஒன்றிய பாசறை செயலாளர் முருகன், கிளை செயலாளர்கள் சீனிவாசன், கண்ணன், மாயகிருஷ்ணன், சேகர், ஜெயவேல், மணிகண்டன், அன்பழகன், சுப்ரமணி, சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

× RELATED கிருஷ்ணராயபுரம்...