×

திருப்பூரில் இருந்து மக்களவை தேர்தலுக்கு 508 சிறப்பு பஸ்கள்

திருப்பூர், ஏப்.12: திருப்பூரில், இருந்து பிற மாவட்டங்களுக்கு மக்களவை தேர்தலுக்கு வாக்களிக்க செல்லக்கூடிய பொதுமக்களுக்கு 508 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டவுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிய பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பமாக வந்து தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முன்னிட்டு ஏற்கனவே வடமாநில மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கிவுள்ளனர். அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் வரும் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனால், திருப்பூரிலிருந்து இன்று (12ம் தேதி) துவங்கி தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற நேரங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். தற்போதும் மக்களவைத் தேர்தல், விடுமுறைகள் முன்னிட்டு நாளை முதல் (13ம் தேதி) திருப்பூரிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதன்படி திருப்பூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து சேலத்திற்கு 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை 116 பேருந்துகள், புதிய பஸ் நிலையத்திலிருந்து மதுரைக்கு 156 பேருந்துகள், தேனிக்கு 102, திருச்சிக்கு 90, திண்டுக்கல் 44 என மொத்தமாக 508 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : elections ,Tiruppur Lok Sabha ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்த...