×

பல ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகத்தை திறக்க கோரிக்கை

 

பல்லடம், ஜூன் 24: பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சி பெத்தாம்பாளையத்தில் 2003-2004ம் ஆண்டு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கிராம நிர்வாக அலுவலகத்தின் கீழ் வலசுப்பாளையம், பெத்தாம்பாளையம், நல்லூர்பாளையம், சிங்கனூர் உள்ளிட்ட கிராமங்கள் இருந்து வருகின்றன.

இந்த அலுவலகம் சில காலம் செயல்பட்ட பின்னர் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக இந்த கிராம நிர்வாக அலுவலகம் கணபதிபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திலேயே செயல்பட்டு வருகிறது. பெத்தாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் கணபதிபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வர வேண்டி உள்ளது.

இதனால் பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் தினந்தோறும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பெத்தாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து கிராம நிர்வாக அலுவலகத்தை திறப்பதற்கு மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post பல ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகத்தை திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palladam ,Bethampalayam Panchayat Ganapathipalayam ,Valashupalayam ,Bethampalayam ,Dinakaran ,
× RELATED பணிக்கம்பட்டியில் கூட்டுறவு சங்கம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை