×

தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மீன் விற்பனை அதிகரிப்பு

 

திருப்பூர், ஜூன் 24: திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் மீன்களை வாங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில், ஞாயிற்று கிழமையான நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மீன்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. மீன் பிடி தடை காலம் முடிவடைந்ததால் பொதுமக்கள் கடல் மீன்களை விரும்பி வாங்கி சென்றனர். திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் நேற்று விற்கப்பட்ட மீன்களின் விலை ஒரு கிலோ வருமாறு:

கடல் மீன்களான மத்தி ரூ.280, வஞ்சிரம் சிறியது ரூ.1000, பெரியது ரூ.1800, சங்கரா சிறியது ரூ.300, பெரியது ரூ.380, ஊளி சிறியது ரூ.350, பெரியது ரூ.550, பாறை ரூ.550, விலமீன் ரூ.600, நண்டு பெரியது சிறியது ரூ.300, பெரியது ரூ.480, இரால் ரூ.300-450, டேம் மீன்களான கட்லா ரூ.180, ரோகு ரூ.150, நெய்மீன் ரூ.110, பாறை ரூ.140, ஜிலேபி மீன் ரூ.110 ஆகிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

The post தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மீன் விற்பனை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Thennampalayam market ,Tirupur ,Tirupur Palladam Road South Palayam ,Thennampalayam ,Dinakaran ,
× RELATED சுரைக்காய் வரத்து அதிகரிப்பு