×

தேன்கனிக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூ. பிரசார கூட்டம்

தேன்கனிக்கோட்டை, ஏப்.12:  தேன்கனிக்கோட்டையில், காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லகுமாரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், இருதயராஜ், அனுமப்பா, சந்திரசேகர், திமுக நகர செயலாளர் சீனிவாசன், துணை செயலாளர் சக்திவேல், காங்கிரஸ் முன்னாள் நகர செயலாளர் தாஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் சிபிஎம் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் பேசினார். இதில் மக்கள் நலத்திட்டங்கள், மாணவர்கள் பயன் பெற காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமாரை ஆதரிக்க வேண்டும் என்றார். ஓசூர்:  ஓசூர் அருகே மத்திகிரியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயராமன், செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சேதுமாதவன், ரவி, சிஐடியூ துணை தலைவர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

சிறப்பு அழைப்பாளர் மாநிலக் குழு உறுப்பினர் தயாநிதி பேசுகையில், ‘கடந்த முறை எம்பியாக வெற்றி பெற்ற அசோக்குமார், ஓசூர்-கிருஷ்ணகிரி ஜோலார்பேட்டை ரயில் பாதை கிடைத்துவிடும் என்றார். அதேபோல் 2 மேம்பாலம் மற்றும் காய்கறி, பூக்கள், மாம்பழங்கள் குளிரூட்டும்  நிலையம் அமைத்துத் தரப்படும் என்ற வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மீண்டும் அதே வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். எனவே காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்,’ என்றார். ஓசூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சத்யா, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற வேட்பாளர் செல்லகுமார் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Marxist Communist ,meeting ,Dhenkanikkottai Campaign ,
× RELATED திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மேற்கு...