×

சின்னசேலம், கள்ளக்குறிச்சி ஒன்றியங்களில் அமமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி, ஏப்.12: கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட் பாளரான முன்னாள் எம்எல்ஏ கோமுகிமணியன் நேற்று சின்னசேலம் ஒன்றிய பகுதியான அம்மையாகரம் சமத்துவபுரம், மூங்கில்பாடி, எலவடி, பூசப்பாடி, பாண்டியங்குப்பம், திம்மாபுரம், தகரை உள்பட 30 கிராமங்களிலும் மற்றும் வடக்கநந்தல் பேரூராட்சி பகுதி, கள்ளக்குறிச்சி ஒன்றியம் பரிகம், எடுத்தவாய்நத்தம், மண்மலை, க.செல்லம்பட்டு, கரடிசித்தூர், தாவடிப்பட்டு, பால்ராம்பட்டு, க.அலம்பலம் உள்பட 31 கிராமங்களிலும் பரிசுப்பெட்டி சின்னத்திற்கு பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரித்தார்.  

ஒன்றிய செயலாளர்கள் சின்னசேலம் ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி மதுசூதனன், ஒன்றிய அவைத்தலைவர் ராமன், மாவட்ட மகளிர் அணி தலைவி தனலட்சுமி,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கிருபாநிதி,  ஒன்றிய துணை செயலாளர்கள் முருகேசன், சக்திவேல், உதயகுமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய இலக்கிய அணி பழனிவேல், ஒன்றிய வர்த்தகர் அணி செயலாளர் ரவி,  ஒன்றிய பாசறை செயலாளர் முருகன், ஒன்றிய பொருளாளர் தட்சிணாமூர்த்தி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சரவணன், ஒன்றிய நிர்வாகிகள் ராமச்சந்திரன், தனசேகர், துரை, சீனு, வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Amnesty ,Kallakurichi Union ,
× RELATED மிக்ஜாம் புயல் எதிரொலி: தொண்டு...