×

எஸ்.எஸ்.ஐ.யை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை

சேலம், மே 23: சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் எஸ்.எஸ்.ஐ.யாக பணியாற்றிய மணி என்பவர் மீது, மாமூல் வாங்கிய வழக்கில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று ஒரு நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த, சேலம் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் விஜிலென்ஸ் போலீசார் அனுமதி பெற்றனர்.
இதன்படி, நேற்று அவரை காவலில் வைத்து விசாரணை நடத்திய போலீசார், பின்னர், அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post எஸ்.எஸ்.ஐ.யை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : SSI ,Salem ,Mani ,Salem Anti-Food Smuggling Unit ,
× RELATED மாநகரில் 51 ஏட்டுகளுக்கு எஸ்.எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு