×

டூவீலர் மீது பஸ் மோதி

தனியார் ஊழியர் பலிமேட்டூர், மே 23: மேச்சேரி அடுத்த மேட்டுப்பட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் தினேஷ்(24). மேச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், கடன் வசூல் பிரிவில் வேலை செய்து வந்தார். நேற்று காலை, மேட்டூரில் கடன் வசூலிப்பதற்காக டூவீலரில் சென்றுள்ளார். எம்.காளிப்பட்டியில் திருப்பத்தில் சென்ற போது, மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பஸ், டூவீலர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட தினேஷ், சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேச்சேரி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தினேஷின் தாயார் செல்வி அளித்த புகாரின் பேரில், மேச்சேரி போலீசார், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய தனியார் பஸ்சின் டிரைவரை தேடி வருகின்றனர். தினேஷின் சடலம், மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post டூவீலர் மீது பஸ் மோதி appeared first on Dinakaran.

Tags : Balimattur ,Dinesh ,Arumugam ,Mettupatti Kattuval ,Mecheri ,Macchery ,Mettur ,Dinakaran ,
× RELATED போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க ஊசியை விழுங்கிய ரவுடி