×

கெங்கவல்லியில் புதிய பேருந்து நிலையம்

கெங்கவல்லி, ஏப். 11:  கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரான முன்னாள் எம்எல்ஏ கோமுகி மணியன் சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தலைவாசல் ஒன்றியம் மற்றும் கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள  இலுப்பநத்தம் , வேப்பம்பூண்டி, நாவலூர், புனல்வாசல், வீரகனூர், தெடாவூர், ஓதியத்தூர், நடுவலூர், ஆணையம்பட்டி, கெங்கவல்லி பேரூராட்சி, கடம்பூர், 74 கிருஷ்ணாபுரம், கூடமலை, மண்மலை, தகரப்புதூர், செந்தாரப்பட்டி, தம்மம்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் நேற்று  திறந்த வேனில் நின்றபடி பரிசுப்பொட்டி சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தின் போது வேட்பாளர் கோமுகி மணியன் பேசியதாவது: கெங்கவல்லி தாலுகாவாக அறிவித்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், இங்கு புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றி கெங்கவல்லியில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும், கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.கெங்கவல்லியில் புதிதாக அரசு கல்லூரி அமைக்கப்படும். கெங்கவல்லி சுவேதா நதிக்கரையில் மணல் கொள்ளை தடுப்பதற்கு முயற்சி எடுக்கப்படும். மேட்டூர் உபரிநீரை சுவேதா நதியில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

 எனவே என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என கூறி வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் அவருடன் சேலம் மாவட்ட செயலாளர் காட்டு ராஜா, மாவட்ட அவைத்தலைவர் சண்முகம், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர் சூர்யா, கமலக்கண்ணன், மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் ஜெயக்குமார், ரவி, கெங்கவல்லி அவைத்தலைவர் ராஜமாணிக்கம், பொருளாளர் அண்ணாதுரை, நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு துணைச் செயலாளர் முகமது முஸ்தபா, நகர இணைச்செயலாளர் சந்திரசேகர் , கூட்டணி கட்சியை சேர்ந்த கெங்கவல்லி தொகுதி தலைவர் முஹம்மது ஜியாவுள் ஹக், துணைத் தலைவர் அப்துல் நஜீர், செயலாளர் தர்வேஷ் அஹமத், பொருளாளர் முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kenkavalli ,
× RELATED கெங்கவல்லி அருகே நதியின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்த மக்கள்