×

நன்னகரத்தில் ஏப். 13ல் ராமநவமி ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் சிறப்பு பூஜை

தென்காசி, ஏப். 11:   தென்காசி அடுத்த நன்னகரம்_ராம ஆஞ்சநேயர் கோயிலில் நாளை மறுதினம் (13ம் தேதி) ராமநவமியை முன்னிட்டு பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடத்தி சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர்.
நன்னகரத்தில் உள்ள ராம ஆஞ்சநேயர் கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா சிறப்பாக நடப்பது  வழக்கம். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கி தொடர்ந்து நடந்து  வருகிறது.
நாளை மறுதினம் (13ம் தேதி) ராம நவமியையொட்டி காலை 10 மணிக்கு பக்தர்களின்  பால்குடம் ஊர்வலம் நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு கோயிலை வந்தடைந்ததும் சிறப்பு பாலாபிஷேகம் முதலான பல்வேறு திருமஞ்சனமும் தொடர்ந்து அலங்கார தீபாராதனையும், மதியம் 1.30 மணிக்கு அன்னதானமும் நடைபெறும். மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலியும், இரவு 8.30  மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து  வருகின்றனர்.

Tags : Ramanavami Anjaneya ,news Devotees ,temple ,
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு