×

நாகை எம்பி தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை.சரவணனுக்கு ஆதரவாக அமைச்சர் காமராஜ் பிரசாரம்

திருவாரூர், ஏப்.11: நாகை எம்பி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தாழை சரவணனுக்கு ஆதரவாக நேற்று  வலங்கைமான் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் அமைச்சர் காமராஜ் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.   நாகை எம்பி தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக தாழைசரவணன் போட்டியிடும் நிலையில் அவருக்கு ஆதரவாக அமைச்சர் காமராஜ் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.அதன்படி நேற்று வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொட்டையூர், மாணிக்கமங்கலம், பாப்பாக்குடி, குருவாடி, சாத்தனூர், புலவர்நத்தம், ஆலங்குடி, பூந்தோட்டம், திருவோணமங்கலம், மாத்தூர், கீழஅமராவதி, மேலஅமராவதி, பெருங்குடி, அரித்துவாரமங்கலம், ரெகுநாதபுரம், அவளிவநல்லூர், கிளியூர், முனியூர், களத்தூர், வேலங்குடி, மாளிகை திடல், ஆவூர், அன்னுக்குடி, கோவிந்தகுடி, இனாம்கிளியூர், சந்திரசேகரபுரம், ஆதிச்சமங்கலம், வலங்கைமான் நகரம், தொழுவூர், பாடகச்சேரி, சித்தன்வாழுர், கண்டியூர், கீழவிடையல், மேலவிடையல்  உட்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் நிலையான ஆட்சி அமையவும், மத்திய, மாநில அரசின் திட்டங்கள் தொடர்ந்து நடைபெறவும் வேட்பாளர் சரவணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அமைச்சர் காமராஜ் கேட்டுக்கொண்டார்.



Tags : Kamaraj Prosper ,Vote ,Saravanan ,
× RELATED விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...