×

தேர்தல் நேரத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் ஆய்வுக்கு வந்த அதிகாரிகள்

நாகர்கோவில், ஏப். 11: பாராளுமன்ற தேர்தல் நடந்து வரும்  நிலையில் அதிகாரிகள் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியதுமருத்துவமனைகளில், மாரடைப்பு, பக்கவாதம், விஷமருந்துதல், தீக்காயம், விபத்து போன்ற பாதிப்புகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, அரசு மருத்துவமனைகளில் ஒரே இடத்தில் இந்த சிகிச்சைக்கான வசதிகள் இல்லாத காரணத்தாலும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் (TAEI) தாய் திட்டம் (அனைத்து அவசர சிகிச்சைப்பிரிவும் ஒரே இடத்தில் இருக்கும் ) தொடங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் நடந்து வருகிறது.

 ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் தாய் திட்டத்தில் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மருத்துவத்துறை இணை இயக்குநர்கள் குருநாதன், கதிர்வேல் ஆகியோர் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பேராசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் டீன்(பொறுப்பு) ராதாகிருஷ்ணன் மற்றும் உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன், உதவி உறைவிடமருத்துவர்கள் கலைகுமார், ரெனிமோள், துறை தலைவர்கள் செல்வம், சுரேஷ், முரளிதரன், பயாஸ், ஜோனிமென்டிஸ், எட்வட் ஜாண்சன், ஜெயலால், ஞானகுரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இது குறித்து மருத்துவஅதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு மருத்துவக்கல்லூரிகளில் அவசர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட அவசர சிகிச்சைகள் மட்டுமே வழங்கமுடியும். அதிகமான உயிரிழப்புகள் மாரடைப்பு, பக்கவாதம், விஷமருந்துதல், தீக்காயம், விபத்து, மற்றும் குழந்தைகளுக்கு உண்டான நோய்கள் காரணமாக ஏற்படுகிறது.இதனை தடுக்கும் வகையில் தாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியிலும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டத்தால் அனைத்து தீவிர சிகிச்சைப்பிரிவுகளும்  ஒரே இடத்தில் அமையும். அதற்கான  பணிகளும் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்து மே மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

 பாராளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் அதிகாரிகள் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் ஆய்வு மேற்கொள்ள வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.படித்தவர்கள் நிறைந்த  குமரியில் புதிய அத்தியாயம் எழுத வேண்டும்தக்கலை, ஏப்.11: படித்தவர்கள் நிறைந்த இந்த மாவட்டத்தில் புதிய அத்தியாயம் எழுத வேண்டும் என்று கன்னியாகுமரி மக்களவை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் லெட்சுமணன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் லெட்சுமணன் நேற்று காலையில் தக்கலை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முளகுமூடு பகுதியில் இருந்து தனது தேர்தல் பிரசாரம் தொடங்கினார். அங்கிருந்து மருதூர்குறிச்சி, பள்ளியாடி ஜங்ஷன், ெநய்யூர் மருத்துவமனை ஜங்ஷன், இரணியல், கண்டன்விளை, மாடத்தட்டுவிளை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இரண்டு தேசிய கட்சிகள் மதங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்கின்றனர். நாங்கள் மதத்தை மதிக்கிறோம். மனித நேயத்தையும் மதிக்கிறோம். மதம் வேண்டாம் என்று சொல்லவில்லை. படித்தவர்கள் நிறைந்த இந்த மாவட்டத்தில் புதிய அத்தியாயம் எழுத வேண்டும் என்று சொன்னால் மதங்களை கடந்து வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் தமிழக நலன் காக்கப்படும்.

பாஜவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று அம்மா சொன்னார். இன்று அதிமுக அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளது. நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரன், பாஜவுடன் ஒரு போதும் கூட்டணி வைக்க தயார் இல்லை என்று திமுகவால் கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு இதுவரை பதில் இல்லை. பா.ஜ, காங்கிரஸ் கட்சிகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டிக்கு வந்த உடனேயே பாஜ.வின் கதை முடிந்துவிட்டது. சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக டிடிவி உள்ளார். எனவே பரிசு பெட்டி சின்னத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  கிழக்கு மாவட்ட செயலாளர் பச்சைமால் தொடங்கி வைத்தார். தக்கலை தெற்கு ஒன்றிய செயலாளர் ராபர்ட்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் அம்பிளி கலா, பேரவை செயலாளர் ஆறுமுகராஜா, இலக்கிய அணி செயலாளர் புஷ்பராஜ், குருந்தன்கோடு தெற்கு ஒன்றியசெயலாளர் வேலுதாஸ், வடக்கு ஒன்றிய செயலாளர் எட்வின் ஜெயராஜ், கப்பியறை பேரூர் செயலாளர் ஜேம்ஸ் எடிசன், முளகுமூடு பேரூர் செயலாளர் பென்னட், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் லெனோ பிபின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாலையில் பரைக்கோடு, மூலச்சல் ஜங்ஷன், ஈத்தவிளை, கூழக்கடை, மணலிக்கரை, மேக்காமண்டபம் உள்ளிட்ட இடங்களில் அவர் பிரசாரம் செய்தார்.

Tags : Assamese College Medical College ,
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...