×

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா முன்னிட்டு பால்கம்பம் நடும் நிகழ்ச்சி

வேலூர், ஏப்.11: குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் நேற்று பால்கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா ஆண்டுதோறும் மே மாதம் 15ம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி மே 11ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணம் முன்னதாக மே 14ம் தேதி தேர் திருவிழாவும் நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு நேற்று குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் வளாகத்தில் பால் கம்பம் நடும் விழா சிறப்பாக நடந்தது. மேலும் அம்மனுக்கு சந்தன காப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும், கோயில் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், தக்கார் மாதவன், நிர்வாக அதிகாரி வடிவேல்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : occasion ,festival ,Kangayamman Chirus ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...