×

மருவத்தூர் பகுதியில் அனுமதி பெற்று வரைந்த தேர்தல் சின்னம் அளித்த நபர்கள் மீது புகார்

செந்துறை, ஏப். 10: மருவத்தூர் பகுதிகளில் அனுமதி பெற்று வரைந்த தேர்தல் சின்னங்களை அழித்தவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. செந்துறை அருகே உள்ள விழுப்பனங்குறிச்சி, மருவத்தூர் பகுதிகளில் அனுமதி பெற்று வரையப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் வாக்கு கேட்டு வரையப்பட்ட பானை சின்னங்களை மர்மநபர்கள் அழைத்துள்ளனர். இதைதொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செந்துறை காவல் நிலையத்தில் திமுக ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி மற்றும் திக, விசிக, காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சியினர் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக செந்துறை காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தெரிவித்தார். அப்போது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக செய்யப்போவதாக கட்சியினர் தெரிவித்தனர்.

Tags : area ,Maruvathur ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...