×

பயன்பாட்டில் இல்லாத கட்டாய தொழிலாளர் சட்டம் உட்பட 89 சட்டங்கள் நீக்கம்: சட்ட முன்வடிவு தாக்கல்

சென்னை:  தமிழக சட்டப் பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்த சட்ட முன்வடிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில சட்ட ஆணையமானது பல்வேறு இயற்று சட்டங்கள் மிகவும் பழமையானதாக மற்றும் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கின்ற சட்டங்களை நீக்கம் செய்ய, தன்னுடைய பல்வேறு அறிக்கைகளில் பரிந்துரை செய்துள்ளது. மேலும், இந்திய அரசின் சட்டம் இயற்றும் துறை, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் மற்றவற்றிற்கிடையே 1858ம் ஆண்டு தமிழ்நாடு கட்டாய தொழிலாளர் சட்டத்தை நீக்கம்செய்வதற்கு தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு கோரியுள்ளது. மாநில சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் இந்திய அரசின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு மிகவும் பழமையான மற்றும் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கின்ற சட்டங்களை நீக்கம் செய்வதற்கு அரசானது முடிவு செய்துள்ளது. அதன்படி, 1976ம் ஆண்டு தமிழ்நாடு கூடுதல் விற்பனை வரி சட்டம், 1860ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடைநோய் சட்டம், 1955ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 1954ம் ஆண்டு இந்து சமய அறநிலையச்சட்டம் உட்பட 89 சட்டங்கள் நீக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post பயன்பாட்டில் இல்லாத கட்டாய தொழிலாளர் சட்டம் உட்பட 89 சட்டங்கள் நீக்கம்: சட்ட முன்வடிவு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister of ,Law Ragupathi ,Tamil Nadu Law Council ,Tamil Nadu State Law ,
× RELATED முத்தரையர் 1349வது சதயவிழா: எல்.முருகன் வாழ்த்து