×

வாழப்பாடி அருகே கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் பிரசாரம்

வாழப்பாடி, ஏப்.8: வாழப்பாடி அருகே, கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாழப்பாடி அருகே கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் திமுக வேட்பாளர் கவுதம சிகாமணி, நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, காங்கிரஸ் கட்சி வாழப்பாடி ராமசுகந்தன், முன்னாள் எம்எல்ஏ தமிழ்செல்வன், வாழப்பாடி நகர செயலாளர் செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்.செந்தில், முருகமணி உள்பட பலர் கலந்து கொண்டு, பொதுமக்களிடையே உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தனர். வேட்பாளர் கவுதமசிகாமணி, சந்திரபிள்ளை வலசு, சின்னமநாயக்கன்பாளையம், புழுதிக்குட்டை, பேளூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags : candidate ,Kallakurichi DMK ,residence ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்