×

காங்கயம் அருகே வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்

காங்கயம்,ஏப்.8: காங்கயம் அருகே  சுற்றுலா வேன் கவிழ்ந்ததில், கோவிலுக்கு சென்ற பக்தர்கள்  15 பேர் காயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள ஜம்பை மற்றும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆகிய பகுதியை சேர்ந்த பக்தர்கள் தங்கள் உறவினர்கள் 60 பேருடன் 2 வேன்களில் பழனி முருகன் கோயிலுக்கு நேற்று காலை புறப்பட்டனர். வழியில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு சென்றனர்.பின்னர் சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில் செல்வதற்காக காங்கயம் சென்னிமலை ரோட்டில் உள்ள கல்லேரி என்ற இடத்திலிருந்து சிவன்மலை செல்லும் ரோட்டில்  சென்று கொண்டிருந்தனர்.அப்போது சாலையின் குறுக்கே சென்ற பைக் மீது  மோதாமல் இருக்க வேனை திருப்பிய போது சாலையோரம் வேன் கவிழ்ந்தது.இதில் வேனில் பயணம் செய்த 9 பெண்கள் உட்பட 15 பேர் காயமடைந்தனர். உடன்டியாக மற்றொரு வேனில் வந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதில் மணிகண்டன் (22) சுசீலா (44) ரத்தினவேல் (57)சின்னப்பன்  (60) ஆகியோர் காங்கேயம் அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று திரும்பினர். இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Tags : Konkan ,
× RELATED வட மாநிலங்களில் பனிப் பொழிவு நீடிக்கும்: வானிலை மையம் தகவல்