×

அமமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி, ஏப். 5:     கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ கோமுகிமணியன், சங்கராபுரம் நகர பகுதியில் அமமுக மாநில செயலாளர் பிரபு எம்எல்ஏ தலைமையில் நிர்வாகி
களுடன் திறந்த வேனில் நின்றபடி பரிசு பெட்டி சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார். முன்னதாக சங்கராபுரம் நகர செயலாளர் ராம்குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கோமுகிமணியனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர் கோமுகிமணியன், சங்கராபுரம் நகர பகுதியில் உள்ள 15 வார்டுகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எம்ஜிஆர் காலத்தில் சின்னசேலம் தொகுதியில் எம்எல்ஏவாக என்னை மக்கள் தேர்வு செய்தனர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உழைக்க நான் காத்திருக்கிறேன். எனவே, இந்த தொகுதியின் மண்ணின் மைந்தரான என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள், என கூறி வாக்கு சேகரித்தார். அமமுக மாவட்ட அவை தலைவர் பாண்டியன், மாவட்ட மாணவரணி செயலாளர்
சீனுவாசன், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் உமர்பாஷா, ஒன்றிய செயலாளர் மாயாவேலாயுதம், நகர சிறுபான்மை பிரிவு முகமதுஇஸ்ரிப், பொதுக்குழு உறுப்பினர் உமாநஷிர், இளைஞர் அணி சந்தோஷ்குமார், நகர நிர்வாகி லட்சுமணகுமார், தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன், வார்டு செயலாளர்கள் முருகன், சண்முகம், லியோசெல்வராஜ், சவுகத்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : EVM ,
× RELATED கர்நாடகாவில் இவிஎம் உடைக்கப்பட்ட...