×

மாவட்டம் அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி: அர.சக்கரபாணி எம்எல்ஏ பேச்சு

ஒட்டன்சத்திரம், ஏப். 4: ஒட்டன்சத்திரம் அருகே தொப்பம்பட்டி மேற்கு, ஒன்றிய பகுதிகளான கீரனூர், நால்ரோடு, பூலாம்பட்டி, பெருச்சிபாளையம், தொப்பம்பட்டி, அத்திமரத்துவலசு, முத்துநாயக்கன்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் திண்டுக்கல் மக்களவை தொகுதி திமுக வேட்பார் வேலுச்சாமி பிரசாரம் செய்தார், வழிநெடுகிலும் கிராமமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

இவரை ஆதரித்து அர.சக்கரபாணி எம்எல்ஏ பேசுகையில், ‘ஆளும் எடப்படி அரசு ஒரு எடுபுடி அரசு. பிஜேபி அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கக்கூடிய ஒரு போர். இதில் நிச்சயம் வெற்றி பெறுவோம் பிஜேபி ஆட்சிக்கு வருவதற்காக மோடி என்னென்ன பொய் பிரசாரங்கள் செய்தார் என்று தெரியுமா. அனைவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வேன், நாட்டிலுள்ள கருப்பு பணம் முழுவதுமாக ஒழிப்பேன், பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணம் அனைத்தும் வெளி கொண்டு வருவேன் என்று சொன்னார். இரவோடு இரவாக 500 ரூபாய் நோட்டு, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தார்.
 
இதனால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள், ஜிஎஸ்டி வரி உயர்வால் சிறு, குறு தொழில்கள் நசுக்கப்பட்டன. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கேஸ் சிலிண்டரின் விலை 350 ரூபாய். தற்பொழுது ஒரு சிலிண்டரின் விலை கிட்டத்தட்ட 1000 ரூபாயை நெருங்கிவிட்டது. அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தவர்கள் சந்தர்ப்பவாத கூட்டணி. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியும் அமையும் பட்சத்தில் ராகுல்காந்தி தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது போல் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனைவருக்கும் மாதம் ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும், விவசாய கடன் அனைத்தும் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி மற்றும் பல சலுகைகளை பெற்றுத்தர எங்களால் முடியும். நாங்கள் செய்வதை தான் சொல்வோம். எனவே தவறாமல் வேட்பாளர் வேலுச்சாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்’ என்றார்.

Tags : AIADMK ,alliance ,coalition ,district ,speech ,Chavan Chakrapani MLA ,
× RELATED கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்...