×

திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் எண்டாஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி

திண்டுக்கல், மே 30: திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் அதிநவீன எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எண்டோஸ்கோப்பி என்பது இரைப்பையில் உள்ள திசுக்களின் நோய்களை கண்டறிய பயன்படுகிறது. ஆனால், அல்ட்ராசவுண்டு மூலமாக குடலின் தோல் பகுதி மற்றும் வெளிப்புற திசுக்களின் நிலையை கண்டறியலாம். எண்டோஸ்கோப்பியில் அல்ட்ராசவுண்ட் வசதி உள்ளதால் உயர் அதிர்வெண் ஒலி அலைகள் வாயிலாக செரிமான பாதை, நுரையீரல், கணையம், பித்தப்பை, கல்லீரல், நிணநீர் கட்டிகள் மற்றும் சுற்றியுள்ள திசுக்களின் நிலையை துல்லியமாக கண்டறியலாம்.கணைய புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், செரிமான புற்றுநோயை கண்டறிந்து அதை வகைப்படுத்தவும் பெரிதும் பயன்படும்.

இது ஆம்புலரி கார்சினோமா என்ற அரிய வகை புற்றுநோய் கட்டியை கண்டறிந்து வகைப்படுத்த பெரிதும் உதவுகிறது. எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்டு தொழில்நுட்பத்தின் வாயிலாக கணையத்தில் உள்ள திரவம் மற்றும் திசுக்களை சேகரிக்கவும், நீர்கட்டிகளிலிருந்து திரவங்களை அகற்றவும், வீரியமிக்க கட்டிகளுக்கு சிகிச்சை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது.எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் மூலம் செலியாக் பிளெக்ஸஸில் பீனால், எத்தனால் போன்ற ஆல்கஹால் செலுத்தப்படுவதால் மூளை மற்றும் முதுகெலும்புக்கு வலிகளை கடத்தும் நரம்புகள் அழிக்கப்படுகின்றன. இதனால் வலி நிவாரண சிகிச்சையில் மற்ற கருவிகளை விட எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் பெரிதும் உதவுகிறது. எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் செயல் முறையில் கதிர்வீச்சு அபாயம் இல்லை. வெளிநோயாளி பிரிவில் இப்பரிசோதனையை செய்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் எண்டாஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி appeared first on Dinakaran.

Tags : Dindigul Vadamalayan Hospital ,Dindigul ,Endoscopy ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு