×

சதாசிவம் கதிர்காமவள்ளி பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு முகாம்

மன்னார்குடி, மார்ச் 29: மன்னார்குடி அருகே செருமங்கலத்தில் இயங்கிவரும் சதாசிவம் கதிர்காமவள்ளி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் 3வது ஆண்டாக நடைபெற்றது. மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளில் இருந்து திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சென்னை, கோவை மற்றும் ஓசூர் பகுதிகளை சேர்ந்த எல்அன்டி, அசோக்லேலண்ட், யமஹா, டாபே குரூப், யுகால், ஜேபிஎம் குரூப்ஸ், எல்ஜிபி, பாரத் பில்டர்ஸ் உட்பட பல முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டன.
இந்நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய இறுதியாண்டு மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கல்லூரி தாளாளர் சதாசிவம், செயலாளர் சரவணகுமார் சவுத்ரி மற்றும் முதல்வர் முன்னிலையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Tags : Employment camp ,Sadasivam Kadirgamawali ,
× RELATED மாவட்ட கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்