×

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

முத்துப்பேட்டை, ஜூன் 22: முத்துப்பேட்டை பேரூராட்சி அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய அரசு கர்நாடக அரசிடம் வலியுறுத்தி காவிரி நீரை திறந்து விடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய தலைவர் யோகநாதன், ஒன்றிய பொருளாளர் தமிழ்செல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில் விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் முருகையன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, நகர செயலாளர் மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சிவசந்திரன் ஆகியோர் பேசினார்கள். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துக்கொண்டு சாகுபடிக்கு விரைந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

The post முத்துப்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Farmers Association ,Muthuppet ,Muthupet ,Tamil Nadu Farmers' Association ,Union Government ,Karnataka government ,Union Secretary ,Subramanian ,Union ,President ,Yoganathan ,Treasurer ,Muthupettai ,
× RELATED வன விலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு...