×

பழுதான சிமெண்ட் சாலைகள்

உளுந்தூர்பேட்டை, மார்ச் 29:     உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது பின்னல்வாடி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிமெண்ட் சாலைகள் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் போடப்பட்டுள்ளது. இந்த சாலைகள் முழுவதும் தற்போது சிமெண்ட் சாலைகள் உடைந்தும், அதில் இருந்து கற்கள் பெயர்ந்தும் வருவதால் தெருக்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள்  தெரிவித்துள்ளனர்.  மேலும் தரமற்ற முறையில் இந்த சிமெண்ட் சாலை போடப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர் என்றும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சிமெண்ட் சாலையை மீண்டும்
பராமரிப்பு செய்து தரமான சாலையாக போட வேண்டும் என பின்னல்வாடி கிராம பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Spam cement roads ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை