×

ஏ.ஜே.கே கல்லூரியில் கடல் உணவு திருவிழா

கோவை, மார்ச் 26: கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே கலை அறிவியல் கல்லூரி சார்பில், ‘கடற்கரை’ என்ற பெயரில், கடல் உணவு திருவிழா கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. 10வது ஆண்டாக இந்த உணவு திருவிழா நடைபெற்றது. கல்லூரி செயலர் அஜித்குமார் லால்மோகன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சதீஷ்குமார் வரவேற்றார். கோவை ரெசிடென்சி டவர்ஸ் பொது மேலாளர் சார்லஸ் பேபியன் டோட் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, உணவு திருவிழாவை துவக்கிவைத்தார். அவர் ேபசுகையில், ‘’இந்த உணவு திருவிழா இக்கல்லூரி கேட்டரிங் சயின்ஸ் துறை மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவந்துள்ளது’’ என்றார்.

 விழாவில், கோவை ஐபிஐஎஸ் ஓட்டல் பொது மேலாளர் வேணுகோபால், கோவை விவாந்தா தாஜ் ஓட்டல் பொது மேலாளர் சரத் சந்திரா பேனர்ஜி, கோவை பேர்பீல்ட் மேரியாட் ஓட்டல் தலைமை சமையல் கலை நிபுணர் சோமசேகர் கெடி, கோவை லீ மெரிடியன் ஓட்டல் தலைமை கலை நிபுணர் சக்திவேல், கோவை ஐடிசி வெல்கம் ஓட்டல் தலைமை சமையல் கலை நிபுணர் பிது பூசன் தாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மாணவி அக்ஷயா நன்றி கூறினார். இதையொட்டி, மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.

Tags : Sea Food Festival ,AJ College ,
× RELATED சிவகாசி ஏ.ஜே கல்லூரியில் ‘கைத்தறிக்கு...