×

கிருஷ்ணகிரி பாரத் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

கிருஷ்ணகிரி, மார்ச் 26: கிருஷ்ணகிரி சுபேதார் மேட்டில் சென்னை சாலையில் இயங்கி வரும் பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில்
மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிறுவனர் மணி தலைமை வகித்தார். தாளாளர் கிருஷ்ணவேணி மணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசினார். மேலும், பள்ளியில் பயிலும் கிண்டர் கார்டன், யூகேஜி மாணவ-மாணவிகளுக்கு பட்டமளித்து பாராட்டு தெரிவித்தார். முடிவில் பள்ளி இயக்குனர் டாக்டர் சந்தோஷ் மற்றும் பள்ளி செயலாளர் உஷா சந்தோஷ் ஆகியோர் நன்றி கூறினர். ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் நரேந்திரரெட்டி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags : Kindergarten ceremony ,Krishnagiri Bharath School ,
× RELATED விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளி மழலையர் பட்டமளிப்பு விழா