×

கள்ளக்குறிச்சி தொகுதி அமமுக வேட்பாளர் பயோ டேட்டா

கள்ளக்குறிச்சி, மார்ச் 26:    கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் கோமுகிமணியனை டிடிவி. தினகரன் நேற்று அறிவித்துள்ளார். வேட்பாளரின் சுயவிவரம்:  கோமுகிமணியன் சொந்த ஊர் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முடியனூர் கிராமம் ஆகும். தந்தை பெயர் மாணிக்கம், படிப்பு பிஎஸ்சி, பிஎல், விவசாயம் மற்றும் வழக்கறிஞர் வேலை செய்து வருகிறார். மனைவி அருள்மொழி, மகள் அன்புமொழிக்கு திருமணம் ஆகி விட்டது. மருமகன் முரளி, மகன் அன்புராஜா, மருமகள் நந்தினி. 1979ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம்தேதி எம்ஜிஆர் தலைமையில் கோமுகிமணியனுக்கு திருமணம் நடந்துள்ளது.  1977ல் சின்னசேலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 1980 முதல் 1990 வரை தொடர்ந்து 10 ஆண்டு அதிமுகவில் தியாகதுருகம் ஒன்றிய கழக செயலாளராக இருந்துள்ளார். 1992- 95 வரை ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட அதிமுக அவைத்தலைவராக கட்சியில் பதவி வகித்துள்ளார். இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட எம்ஜிஆர் மன்றத்தலைவராகவும், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2013 முதல் 2018 வரை முடியனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக இருந்துள்ளார். தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளராக இருந்து வருகிறார்.

Tags : candidate ,Kallakurichi Block Amateur ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்