×

பாப்பிரெட்டிப்பட்டியில் சீரான குடிநீர் வழங்கக்கோரி மறியல்

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 21: பாப்பிரெட்டிபட்டியில், சீரான குடிநீர் வினியோகம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில், 15 வார்டுகள் அடங்கி உள்ளது. சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், 5வது வார்டில் கடந்த ஒரு வாரமாக சீரான குடிநீர் வினியோகம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த வார்டு மக்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் அலைய வேண்டி இருந்தது. இது குறித்தும், சீரான குடிநீர் வழங்ககோரி பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நேற்று மாலை 5வது வார்டு பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன், பேரூராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். ஆனால், அலுவலக நேரம் முடிந்து விட்டதால், அங்கு யாரும் இல்லை. இதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். தகவலின் பேரில் வந்த பாப்பிரெட்டிபட்டி போலீசார் விரைந்து வந்து மறியல் செய்ய முயன்றவர்களிடம் பேச்சுவார்தை நடத்தி நாளை முதல் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதை தொடர்ந்து மறியல் முயற்சியை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Poppitippatti ,
× RELATED பாப்பிரெட்டிப்பட்டியில் புதிய உயர்மட்ட பாலம் திறப்பு விழா