×

பாப்பிரெட்டிப்பட்டியில் புதிய உயர்மட்ட பாலம் திறப்பு விழா

பாப்பிரெட்டிப்பட்டி, நவ.1: பாப்பிரெட்டிப்பட்டியில், புதிய உயர்மட்ட பாலம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை சென்னையில் இருந்தவாறு தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.  சேர்வராயன் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வாணியாறு, பாப்பிரெட்டிப்பட்டி-வெங்கிடசமுத்திரம் இடையே பாய்ந்தோடுகிறது. மழை காலத்தின் போது, ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுக்கும் சமயங்களில் பழுதடைந்த பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். எனவே, உயர்மட்ட பாலம் அமைத்து சீரான போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்பேரில், ₹7.65 கோடி மதிப்பில் வாணியாறு ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் பாலத்தை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார். இதனையொட்டி, பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற விழாவில் தர்மபுரி கலெக்டர் மலர்விழி பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பாலத்தை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் குப்புசாமி, விஸ்பநாதன், ராஜேந்திரன், கோவிந்தசாமி, வஜ்ரவேல், தென்னரசு, பொம்மிடி ராஜா, இடும்பன், புரட்சிதாசன், லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Opening ceremony ,highway bridge ,Poppitippatti ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கிளை திறப்பு விழா