×

சில்வார்பட்டியில் இடிந்து விழும் நிலையில் கால்நடை நிலையம் சீரமைக்க கோரிக்கை

தேவதானப்பட்டி, மார்ச் 8: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி கால்நடை கிளை நிலைய கட்டிடத்தை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில்வார்பட்டி ஊராட்சியில் நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, கதிரப்பன்பட்டிபட்டி, தர்மலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் கால்நடைகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள கால்நடைகளின் அவசரத் தேவைக்கும், கறவைமாடுகளுக்கு தடுப்பூசி, சினை ஊசி போன்ற மருத்துவ தேவைக்கு இந்த கிளை நிலையம் பயன்பட்டு வருகிறது. சில்வார்பட்டி பிள்ளையார் கோவில் அருகே தனியாரால் கால்நடை கிளை நிலையத்திற்கு தானமாக கொடுக்கப்பட்ட இடத்தில் இந்த கிளை நிலையம் உள்ளது. தற்போது இந்த கட்டிடம் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, கடந்த ஓராண்டாக இந்த கட்டிடத்தை காலி செய்து அங்கன்வாடி மைய கட்டிடம் அருகே உள்ள வறுமை ஒழிப்பு திட்ட கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. மேலும் இந்த தற்காலிக கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லாததால் கால்நடைகளை ஓட்டிச் சென்றுவர மிகவும் சிரமமாக உள்ளது.
எனவே, சில்வார்பட்டி கால்நடை கிளை நிலைய கட்டிடத்தை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என கால்நடை வளர்ப்போர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு