மயிலம் பொறியியல் கல்லூரியில் வளாக தேர்வு

மயிலம், மார்ச் 8: மயிலம் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிறுவனங்களின் மூலம் வளாக தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையை சேர்ந்த முன்னணி நிறுவனமான ஜஸ்ட் டயல் சார்பில் வளாகத்தேர்வு நடந்தது. மயிலம் பொறியியல் கல்லூரி தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன் எம்எல்ஏ, செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செந்தில் வரவேற்றார். டீன் ராஜப்பன் வாழ்த்துரை வழங்கினார்.  ஜஸ்ட் டயல் நிறுவனத்தை சேர்ந்த மனிதவள மேம்பாட்டு அதிகாரி அப்துல் தலைமையில் நடந்த இவ்வளாக தேர்வு இரு கட்டங்களாக நடந்தது. முதல் சுற்றாக ஆன்லைன் தேர்வு நடந்தது. இதில், இளநிலை மற்றும் முதுநிலையை சேர்ந்த இறுதியாண்டு மாணவர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் நடந்த குழு விவாத சுற்றின் இறுதியில் 16 மாணவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.  இதுவரை நடந்த வளாக தேர்வில் மயிலம் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 424 மாணவர்கள் பல நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அதிகாரி சதீஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் அனைத்து துறை ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories:

>