×

முத்தூர்,வெள்ளகோவிலில் தேரோட்டம்:பக்தர்கள் குவிந்தனர்

காங்கயம், மார்ச்7: முத்தூர் செல்வக்குமாரசுவாமி கோயிலில் சிவராத்திரியையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்                                   திருப்பூர் மாவட்டம் முத்தூரில் உள்ள செல்வக்குமாரசுவாமி கோயிலில் சிவராத்திரி தேர் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியோற்றத்துடன் தொடங்கியது. அன்று காப்பு கட்டுதல் நடைபெற்றது. 1ம் தேதி முதல் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. தேரில் கலசம் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தேருக்கு முன்னாள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொதுமக்கள் தேர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்கள், தேர் இழுக்கபட்டு சிறிது தூரம் சென்று நிலை நிறுத்தபட்டது. இன்று காலை 7.30 மணிக்கு மணிக்கு தேர் நிலைசேர்க்கப்பட உள்ளது. நாளை காலை 8 மணிக்கு கொடி இறக்குதல், மஞ்சள் நீரால் பூஜை செய்து விழா நிறைவு பெருகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்காணக்காண பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வீரக்குமாரசாமி கோயில் தேரோட்டம்:

வெள்ளகோவிலில் வீரக்குமாரசாமி கோயில் தேர்த்திருவிழா மகா  சிவராத்திரியையொட்டி நேற்று முன்தினம் தேர் நிலை பெயர்த்தல் நிகழ்ச்சி  நடைபெற்றது.
 அப்போது பக்தர்கள் தேரை வடம் பிடித்து தேரை இழுத்தனர். அதன் பின்னர் தேர் நிறுத்தி வைக்கப்பட்டது  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று  இரண்டாம் நாள் தேர் வடம்  பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது   தேர் கோவிலின் தென்புறம்  நிறுத்தப்பட்டது 3ம் நாள் தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது. அதன் பின்னர்  திருத்தேர் நிலையை வந்தடையும் தேரோட்ட ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர்  செய்திருந்தனர்.

Tags : Devotees ,Muthur ,Vellakovil ,
× RELATED சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்