×

தளி சித்த கங்கா மடத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி

தேன்கனிக்கோட்டை, மார்ச் 7:  தளியில், உலக வீரசைவ லிங்காயத்து மகாசபா சார்பில், சிவக்குமார சுவாமிகளின் புகழ் பரப்பும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. வீரகாசி எனப்படும் ஆட்டம்,பாட்டத்துடன் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து, தளி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து ஊர்வலமாக சென்று, சிவக்குமார சுவாமிகளின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், கர்நாடக மாநிலத்தில் இருந்து பல்வேறு மடாதிபதிகள், தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை மற்றும் கர்நாடக மாநில வீரசைவ லிங்காயத்து நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Dhali Sita Ganga Monastery Concert ,
× RELATED மது விற்ற 2 பேர் கைது