×

தண்ணீர் தேடி அலையும் விலங்குகள்

மயிலம், மார்ச் 7: விழுப்புரம் மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக நீர் நிலைகள் வறண்டு காணப்படுவதால், தண்ணீர், உணவு கிடைக்காமல் குரங்குகள் உள்ளிட்ட  விலங்குகள் அவதியடைந்து வருகின்றன
கடந்த ஆண்டு பருவமழை பெய்யாமல் பொய்த்து போனதால் கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் நீர் நிலைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டது. மேலும் நிலங்கள் வெடித்து பாளம் பாளமாக காணப்படுகிறது. மரங்கள் நிறைந்த பகுதிகள், கோயில்கள் ஆகிய இடங்களில் குரங்குகள், மயில்கள் அதிக அளவில் காணப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளிலும் மரங்களில் அதிக குரங்குகள் வசிக்கிறது.
இவைகள் மரங்களில் உள்ள காய், கனிகள், பொதுமக்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிடுகின்றன. ஏரி, குளங்களில் கிடைக்கும் தண்ணீரை இவைகள் குடித்து வாழ்ந்து வந்தன.
தற்போது கடும் வறட்சியால் நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாததால் இவைகள் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதியில் வந்து குடங்களிலுள்ள நீர், பொதுத்தண்ணீர் குழாய்களில் குடிக்து வருகின்றன.
சில நேரங்களில் தோட்டங்களில் உள்ள மண் பானைகளை குரங்குகள் தள்ளி உடைக்கும் நிலையும் தொடர்கிறது. இது போன்று ஆடு, மாடுகள், நாய் உள்ளிட்ட விலங்குகள், குருவி, காகம் போன்ற பறவைகளும் தண்ணீர் கிடைக்காமல் பல இடங்களுக்கு அலைந்து செல்லும் நிலை உள்ளது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை