×

மகா சிவராத்திரி விழாவில் 1008 சங்கு அபிஷேகம்

விழுப்புரம், மார்ச் 6:  விழுப்புரத்தில் மகா சிவராத்திரியையொட்டி கைலாசநாதர் கோயிலில் நேற்று முன்தினம் முதல்கால பூஜையுடன் மாலை 6 மணிக்கு விழா தொடங்கியது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு 2வது கால பூஜையும், 11 மணிக்கு மூன்றாவது காலபூஜையும் அபிஷேகம், ஆராதனையும் நடந்தது. அப்போது மூலவர் கைலாசநாதருக்கு 1008 சங்கு அபிஷேகம் நடந்தன. தொடர்ந்து நான்காவது காலபூஜை அதிகாலை 4 மணிக்கு நடந்தது. காலை 7 மணிக்கு நடந்த சிறப்பு பூஜையில் 1008 சங்குகள் வைக்கப்பட்டு யாகங்கள் நடந்தன.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் ஆதிவாலீஸ்வரர் கோயிலிலும் மகா சிவராத்திரி விழா நடந்தது. இதேபோல் வளவனூர் பிரம்மாகுமாரிகள் ராஜயோகதியான நிலையத்தில் மகா சிவராத்திரியையொட்டி அமைதி ஊர்வலம் நடந்தது. பிரம்மக்குமாரர் செல்வக்குமரன் தலைமை தாங்கினார். சிவாச்சாரியார் முருகன், டாக்டர் முருகையன், ஜீவா ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து இரவு உலக பிரசித்திபெற்ற ராஜயோகதியான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Shankar Abhishekam ,Maha Shivarathri Festival ,
× RELATED மழை வேண்டி 108 சங்கு அபிஷேகம்