×

இடைப்பாடியில் யுனிவர்சல் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு

இடைப்பாடி, மார்ச் 6: இடைப்பாடி யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு நடந்தது. தேசிய அறிவியல் தினத்தையொட்டி, இடைப்பாடி கோனகுட்ைடயூரில் உள்ள யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். யுனிவர்சல் பள்ளி செயலாளர் சக்தி சீனிவாசன், முதல்வர் ஜெகதீஷ், இயக்குநர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக, இஸ்ரோ விஞ்ஞானியும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான வாசகம், தமிழ்நாடு அறிவியல் இயக்க சேலம் மாவட்ட தலைவர் ஜெயமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கருத்தரங்கில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுடன் சிறப்பு விருந்தினர்கள் கலந்துரையாடினர். மேலும், மாணவ, மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Seminar ,Universal School ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்