×

திருநாவலூர் காவல்நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் நியமிக்க கோரிக்கை

உளுந்தூர்பேட்டை, மார்ச் 1:  உளுந்தூர்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்டது திருநாவலூர் காவல்நிலையம். இந்த திருநாவலூர் காவல்நிலையத்தின் கீழ் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள், விபத்துகள், மணல் கொள்ளை சம்பவங்களை திருநாவலூர் காவல்நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இந்த காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் நடவடிக்கையால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அன்று முதல் இன்று வரையில் இந்த காவல்நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாத நிலையில் உள்ளது. சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் குறைந்த அளவிலான காவலர்கள் கொண்டு இயங்கி வரும் இந்த காவல்நிலையத்தில் அடிக்கடி ஏற்பட்டு வரும் விபத்து மற்றும் மணல் திருட்டு சம்பங்களால் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் போது காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் காலை முதல் மாலை வரையில் புகார் மனுக்களை கொடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

மேலும் இந்த காவல்நிலைய எல்லை என்பது பண்ருட்டி மற்றும் திருக்கோவிலூர் எல்லை வரையில் உள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணியில் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் கடந்த இரண்டு மாத காலமாக திருநாவலூர் காவல்நிலையத்திற்கு புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாமல் காலியாகவே உள்ளது. தற்போது தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சியினரின் பிரசாரங்கள் நடைபெறுவதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், திருநாவலூர் காவல்நிலையத்திற்கு விரைந்து இன்ஸ்பெக்டர் ஒருவரை நியமிக்க வேண்டும் என திருநாவலூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கிராம பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : police station ,Tirunavalur ,
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை