×

பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

விழுப்புரம், மார்ச் 1:  விழுப்புரம் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. விழுப்புரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் குடோன்  திருச்சி சாலையையொட்டி உள்ளது. நேற்று அதிகாலையில் அங்கு கரும்புகை வெளியேறுவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயனைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Fire accident ,
× RELATED டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7...