×

பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், பிப். 28:  பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு தர வேண்டிய பால் பணம் பாக்கி முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக பணி பாதுகாப்பு, சம்பள உயர்வு இன்றி பணிபுரியும் கிராம கூட்டுறவு சங்க பணியாளர்களை பணிவரன்முறை செய்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும். கால்நடை தீவனம், தாது உப்பு 50 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும். சினைக்கருவூட்டல் ஊசிக்கு திடீரென ரூ.10 உயர்த்தியதை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அரிகரன் தலைமை தாங்கினார். மாநில இணைச்செயலாளர் அரங்க நாராயணன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் செங்கோட்டுவேல் கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள் பெரியகருப்பன், சடையாண்டி, அன்னக்கொடி, இன்பராஜ், கோவிந்தபாண்டியன், உக்கிரபாண்டி, பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Milk producers ,demonstration ,
× RELATED ஆவின் நிறுவனம் நெய் தள்ளுபடி விலையில் விற்பனை